BE THE CHANGE!! Zeroplastic Supermarket in Amsterdam, Netherlands!!!

இன்று படித்த ஒரு சுவையான செய்தி உங்களுக்காக. நெதர்லாந்து தலைநகரமான ஆம்ஸ்டர்டமில் நேற்று (புதன் ) திறக்கப்பட்ட ஒரு சூப்பர்மார்கேட்டில் 700 க்கும் மேற்பட்ட மளிகை/உணவு பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கவரில் விற்கப்படாமல் (பிளாஸ்டிக் போல தோன்றினாலும் ) அதற்கு பதிலாக இயற்கை தாவரங்களிலிருந்து  தயாராக்கப்பட்ட உயிரமென்படலத்தினாலும், கண்ணாடியினாலும்,  காகிதத்தாலும்  (அனைத்தும் மக்கக்கூடியது ) பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஐரோப்பாவின் முதல் பிளாஸ்டிக் அற்ற சூப்பர்மார்கெட் இதுவே.

பிளாஸ்டிக் அற்ற அந்த ஸ்டோரின் பெயர் எக்கோபிளாசா. அரிசி, சாக்லேட், தயிர், காய்கறிகள், பால், பழங்கள்,  இறைச்சி  உள்ளிட்ட அனைத்து உணவு பண்டங்களும் பிளாஸ்டிக் அற்ற பிரிவில் விற்கப்படுகின்றன. ''எ பிளாஸ்டிக் பிளானட்'' எனும் சுற்றுச்சூழல் அமைப்பு எக்கோபிளாசாவிற்கு இத்தகவலை வழங்கியுள்ளது.





சூழலியலார்கள் சமூக வலைத்தளங்களில் இதனை வரவேற்று பகிர்ந்து கொண்டனர்.

இந்த வருட இறுதிக்குள் நெதர்லாந்தில் உள்ள தனது 74 கிளைகளிலும் பிளாஸ்டிக் அற்ற ஸ்டோர்களாக மாற்ற உள்ளதாக எக்கோபிளாசா கூறுகிறது. அடுத்த ஜூன் மாதம்  ஹேக் நகரிலும் இயற்கைச்சூழல் நட்புடைய  ஸ்டோரை திறக்க எக்கோபிளாசா முடிவெடுத்துள்ளது.

உணவு பொருட்களை பிளாஸ்டிக் அற்ற பொருட்களின் மூலம் விற்பனை  செய்வது வளமான எதிர்காலத்தின் முன்னேற்றப்படி என்கிறார் ஏகோபிளாசாவின் தலைமை நிர்வாகி  எரிக் டஸ்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மேவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிளாஸ்டிக் அற்ற சூப்பர்மார்கெட்டுகளை பிரிட்டனில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

உணவு போன்ற முக்கியமான, ஆரோக்கியமான ஒன்றை கேடு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கில் வைத்து விற்பனை செய்வது அர்த்தமற்ற செயல் என்று எ பிளாஸ்டிக் பிளானெட்டின் இணை நிறுவனர் சியன் சதர்லேண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் பேக்கேஜ், உணவு மற்றும் பிற பானங்களை  விற்பதற்கு தேவைப்பட்டாலும் அது பூமியில் பல நூற்றாண்டுகள் தங்கி பெரும் சுற்றுப்புற சூழல் கேட்டை உருவாக்கும்  என்பதில் ஐயமில்லை.

 கணக்கெடுப்பு ஒன்றில்  உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் தண்ணீர் அருந்த உபயோகப்படுத்தப்படுகின்றன என்கிறது எக்கோபிளாசாவின் இணையதளம். அதில் வெறும் 9% பாட்டில்கள்  மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

சிந்திப்பீர்!! முடிந்தவரை பிளாஸ்டிக்கை தவிர்ப்பீர்!! நாம் வாழும் இந்த பூமிக்காக!! நம் எதிர்கால சந்ததிகளுக்காக!!

சிந்தனை தொடரும்!!
உங்கள்
எம்ஜே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

VVS AIYAR- THE FORGOTTEN ICON PART-1 (WILL BE TRANSLATED SOON IN ENGLISH)

How much do you really know about Tamilnadu? 5 Interesting facts

Spoon River Anthology by Edgar Lee Masters